இந்தியா

மக்களவை துணைத் தலைவரை விரைவில் நியமிக்க வேண்டும்: ஆதிர் ரஞ்சன் சௌத்ரி வலியுறுத்தல்

DIN

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக மக்களவை துணைத் தலைவரை நியமிக்க வேண்டும் என அவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் சில நாள்களுக்கு முன்னதாக அவைத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

2019 தேர்தலுக்கு பின்னர் அமைக்கப்பட்ட மக்களவையில் இதுவரை துணைத் தலைவர் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில், அரசியலமைப்பு ஆணையை மேற்கோள் காட்டி, துணைத் தலைவர் பதவியை நிரப்ப வேண்டும் என ஆதிர் ரஞ்சன் சௌத்ரி வலியுறுத்தியுள்ளார். 

'மழைக்கால அமர்வின்போது மக்களவையின் துணைத் தலைவரை ஒருமித்த கருத்தோடு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அரசியலமைப்பு ஆணையை, மக்களவை பின்பற்றும் என நான் நம்புகிறேன்' என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

மாநிலங்களவை அதன் துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க தயாராகி வருகிறது. ஏற்கெனவே ஒரு வருடம் கடந்துவிட்ட நிலையில், மக்களவை துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க இது சரியான தருணம் என்றும் கூறியுள்ளார். 

543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில், பாஜகவில் 303 உறுப்பினர்களும், காங்கிரஸில் 53 உறுப்பினர்களும் உள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

SCROLL FOR NEXT