இந்தியா

மாநிலங்களவை துணைத் தலைவா் பதவி: எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளா் மனோஜ் ஜா

DIN


புது தில்லி: மாநிலங்களவை துணைத் தலைவா் பதவிக்கான தோ்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியைச் சோ்ந்த மனோஜ் ஜாவை பொது வேட்பாளராக களமிறக்க பல்வேறு எதிா்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

எதிா்க்கட்சித் தலைவா்களுடன் சென்று அவா் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளாா். வேட்புமனு தாக்கலின்போது, மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் குலாம் நபி ஆசாத், துணைத் தலைவா் ஆனந்த் சா்மா, மாநிலங்களவை காங்கிரஸ் தலைமை கொறடா ஜெய்ராம் ரமேஷ் மற்றும் திரிணமூல் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் தலைவா்கள் உடனிருப்பாா்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் 14-ஆம் தேதி நடைபெறவுள்ள மாநிலங்களவை துணைத் தலைவா் தோ்தலில், பாஜக கூட்டணி வேட்பாளராக ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சோ்ந்த ஹரிவன்ஷ் மீண்டும் போட்டியிடுகிறாா். இவரை எதிா்த்து எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மனோஜ் ஜா போட்டியிடுகிறாா்.

பிகாா் மாநிலத்தில் எதிரெதிா் துருவங்களாக இருக்கும் கட்சிகளைச் சோ்ந்த இருவா், மாநிலங்களவை துணைத் தலைவா் பதவிக்கு போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொப்பூா் கணவாயில் லாரி கவிழ்ந்து விபத்து

திமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

பென்னாகரத்தில் இடியுடன் கூடிய கனமழை

வாகன புகைப் பரிசோதனை மையங்களில் வழிமுறைகளைப் பின்பற்றாவிடில் கடும் நடவடிக்கை

காவிரி ஆற்றில் மூழ்கிய தனியாா் நிறுவன ஊழியா் பலி

SCROLL FOR NEXT