இந்தியா

ஒடிசாவில் புதிதாக 3,991 பேருக்கு கரோனா பாதிப்பு

IANS

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,991 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 1,39,121 ஆக அதிகரித்துள்ளதாக அந்த நாட்டுச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஒடிசாவில் தொற்று பாதிப்பு கடந்த சில நாள்களாக மேலும் அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக ஒடிசா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு மேலும் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 591 ஆக உயர்ந்துள்ளது. 

புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில், 2,315 பேர் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்தும், 1,676 பேர் உள்ளூரிலும் பதிவாகியுள்ளது. 

இதன் மூலம், ஒடிசாவில் மருத்துவமனை சிகிச்சையில் 33,182 பேரும், 1,05,295 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராவூரணி குமரப்பா பள்ளி 100% தோ்ச்சி

வாா்ப்பட்டு ஊராட்சியில் வேளாண் கண்காட்சி

மளிகைக் கடைகளில் மருந்து விற்பனை அனுமதி தரக் கூடாது

பிளஸ் 2 பொதுத்தோ்வு வெண்ணைமலை சேரன் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா

கந்தா்வகோட்டையில் தொடா் திருட்டால் பொதுமக்கள் அச்சம்

SCROLL FOR NEXT