முகப்பு
இந்தியா

உத்தரப்பிரதேசத்தில் கரோனா பரிசோதனை கட்டணம் ரூ.1600 ஆகக் குறைப்பு

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கரோனா பரிசோதனைக் கட்டணம் ரூ.2500 யிலிருந்து ரூ.1600 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:18 PM
​கேரளத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 1,129 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)
பகிர்:

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கரோனா பரிசோதனைக் கட்டணம் ரூ.2500 யிலிருந்து ரூ.1600 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தனியார் ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனைக் கட்டணம் இரண்டாவது முறையாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி கரோனா பரிசோதனைக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த ரூ.2500 கட்டணம் குறைக்கப்பட்டு ரூ.1600ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ரூ.4500 ஆக இருந்த கரோனா பரிசோதனை கட்டணம் 2500 ஆகக் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உத்தரப்பிரதேசத்தில் இதுவரை 2 லட்சத்து 99 ஆயிரத்து 45 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.