முகப்பு
இந்தியா

அசாமில் மேலும் ஒரு பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுக்கு கரோனா

அசாமில் நல்பாரி தொகுதியை சேர்ந்த பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினரான  அசோக் சர்மாவிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 12 செப்டம்பர், 2020 at 5:51 PM
அசாமில் நல்பாரி தொகுதியை சேர்ந்த பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினரான  அசோக் சர்மாவிற்கு கரோனா
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:49 PM

அசாமில் நல்பாரி தொகுதியை சேர்ந்த பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினரான  அசோக் சர்மாவிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் அசாமில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 26-ஆக அதிகரித்துள்ளது.

அசாம் மாநிலத்தில் நல்பாரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் அவரது மனைவிக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement

இதனால் முன்னாள் முதல்வர் தருண் கோகாய், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட 26 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
  
26 சட்டமன்ற உறுப்பினர்களில் 14 பா.ஜ.க. உறுப்பினர்களும், 6 கூட்டணிக் கட்சி உறுப்பினர்களும், 3 காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும், 3 அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சி உறுப்பினர்களும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாஜக மக்களவை உறுப்பினர்கள் டோபனா குமார் கோகாய், திலிப் சைகிகா, மாநிலங்களவை உறுப்பினர் காமக்கியா பிரசாத் ஆகியோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.