முகப்பு
இந்தியா

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் ஆயுதங்களைக் கைப்பற்றிய எல்லை பாதுகாப்புப் படையினர்

பஞ்சாப் மாநிலத்தின் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:19 PM
கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள்
பகிர்:

பஞ்சாப் மாநிலத்தின் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர்.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ளஃபெரோஸ்பூர் மாவட்டம் இந்திய நாட்டின் எல்லைப் பகுதியில் உள்ளது. பாகிஸ்தான் நாட்டுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் இப்பகுதியில் எல்லைப்பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமை காலை திடீர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது 6 ஏகே-47 ரக துப்பாக்கிகள்,4 எம்-16 ரக துப்பாக்கிகள், 2 கைத்துப்பாக்கிகள், வெடிபொருட்கள், தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கைப்பற்றினர். சர்வதேச எல்லையான அபோஹார் பகுதி வழியாக பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்களும் வெடிமருந்துகளும் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →