திரிபுராவில் கரோனா சிகிச்சை குறைபாடு: அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
திரிபுராவில் கரோனா சிகிச்சை முறையில் நிலவி வரும் குறைபாடுகளைக் குறித்து பதிலளிக்க மாநில அரசுக்கு திரிபுரா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாதிரிபுராவில் கரோனா சிகிச்சை குறைபாடு: அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
திரிபுராவில் கரோனா சிகிச்சை முறையில் நிலவி வரும் குறைபாடுகளைக் குறித்து பதிலளிக்க மாநில அரசுக்கு திரிபுரா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திரிபுராவில் கரோனா சிகிச்சை நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க மாநில அரசுக்கு திரிபுரா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடுமுழுவதும் கரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திரிபுரா மாநிலத்தில் கரோனா சிகிச்சைக்காக மேற்கொள்ள நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை எனக் கண்டித்துள்ள திரிபுரா உயர்நீதிமன்றம் செப்டம்பர் 18ஆம் தேதிக்குள் இதுகுறித்து பதிலளிக்கக்கோரி மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக திரிபுரா மாநிலத்தில் பரவி வரும் கரோனா வைரஸைக் கையாள்வதில் நிலவிவரும் பிரச்னைகள் மற்றும் சுகாதார சேவையை வழங்குவதில் உள்ள குறைபாடுகள் குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இதுகுறித்த வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது உயர் நீதிமன்ற நீதிபதிகள், சிகிச்சையில் உள்ள கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை, சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், துணை மருத்துவ ஊழியர்கள், தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட கரோனா பராமரிப்பு மையங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க மாநில அரசுக்கு உத்தரவிட்டனர்.
தொடர்ந்து கரோனா சிகிச்சைக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகளின் எண்ணிக்கை, இதுவரை அரசு ஒதுக்கியுள்ள நிதி விவரங்களையும் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திரிபுராவில் இதுவரை 18 ஆயிரத்து 300 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.