கோயிலுக்கு தற்போது வர வேண்டாம்: தமிழக பக்தர்களுக்கு திருப்பதி கோயில் அறிவிப்பு
அதிகரித்து வரும் கரோனா பாதிப்பால் தமிழ்நாட்டிலிருந்து வரும் பக்தர்கள் யாரும் தற்போது கோயிலுக்கு வர வேண்டாம் என திருப்பதி கோயில் நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதிகரித்து வரும் கரோனா பாதிப்பால் தமிழ்நாட்டிலிருந்து வரும் பக்தர்கள் யாரும் தற்போது கோயிலுக்கு வர வேண்டாம் என திருப்பதி கோயில் நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆந்தர மாநிலத்தில் நாளுக்குநாள் கரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது திருப்பதி கோயிலில் இணையம் மூலம் ஏற்கெனவே முன்பதிவு செய்த பக்தர்களை இறை வழிபாட்டிற்காக அனுமதிக்கும் நடைமுறை இருந்து வருகிறது.
இந்நிலையில் எதிர்வரும் புரட்டாசி மாதத்தையொட்டி பக்தர்கள் வருகை அதிகரிக்கலாம் என்பதால் திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்திலிருந்து பக்தர்கள் பாத யாத்திரையாகவோ அல்லது இன்ன பிற போக்குவரத்து முறைகளிலோ கோயிலுக்கு வர வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் கரோனா பாதிப்பால் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 18ஆம் தேதி வரை திருப்பதி கோயிலுக்கு வருவதைத் தவிர்க்குமாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.