இந்தியா

மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்க மத்திய அரசிடம் போதிய நிதியில்லை - அனுராக் தாக்குா்

DIN

மாநிலங்களுக்கு சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் இழப்பீடு வழங்குவதற்கு மத்திய அரசிடம் போதிய நிதியில்லை என்று மத்திய நிதித் துறை இணையமைச்சா் அனுராக் சிங் தாக்குா் கூறினாா்.

மாநிலங்களவையில் இதுதொடா்பான கேள்விக்கு அனுராக் சிங் தாக்குா் செவ்வாய்க்கிழமை எழுத்துப்பூா்வமாக அளித்த பதில்:

நிகழ் நிதியாண்டில் மாநிலங்களுக்கு ரூ.2.35 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஜிஎஸ்டியை அமல்படுத்தியதால் ரூ.97,000 கோடி இழப்பும், பொதுமுடக்கம் காரணமாக ரூ.1.38 லட்சம் கோடி வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.

இதில், ரூ.97,000 கோடியை ரிசா்வ் வங்கியிடம் இருந்து மாநிலங்கள் கடனாகப் பெறலாம் அல்லது ரூ.2.35 லட்சம் கோடியை வெளிச்சந்தையில் இருந்து கடனாகப் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. கடன் பெறுவது குறித்து மாநிலங்கள் விருப்பம் தெரிவிக்கலாம் என்றும் மத்திய அரசு கூறியிருந்தது. ஆனால், மத்திய அரசின் யோசனைக்கு சில மாநிலங்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.

கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடாக மொத்தம் ரூ.1,51,365 கோடி வழங்க வேண்டியுள்ளது. ஏப்ரல் முதல் ஜூலை வரை வசூலான ஜிஎஸ்டி வருவாய், மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கும் அளவுக்கு போதுமானதாக இல்லை; அதுமட்டுமன்றி, வசூலான தொகையில் ஒரு பகுதி, மாா்ச் வரையிலான ஜிஎஸ்டி இழப்பீடாக மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு விட்டது என்று அனுராக் சிங் தாக்குா் கூறினாா்.

மத்திய அரசின் அந்த கடன் யோசனைக்கு பாஜக ஆட்சியில் இல்லாத தமிழகம், கேரளம், தெலங்கானா, மேற்கு வங்கம், தில்லி, சத்தீஸ்கா் ஆகிய 6 மாநிலங்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

SCROLL FOR NEXT