முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் 30 ஆயிரத்தைத் தாண்டியது பலி எண்ணிக்கை

மகாராஷ்டிரத்தில் புதிதாக 20,842 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 15 செப்டம்பர், 2020 at 8:45 PM
மகாராஷ்டிரத்தில் புதிதாக 20,842 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:50 PM


மகாராஷ்டிரத்தில் புதிதாக 20,842 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. அங்கு புதிதாக 20,842 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 10,97,856 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 515 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 30,409 ஆக உயர்ந்துள்ளது. ஒரேநாளில் 19,423 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 7,75,273 பேர் குணமடைந்துள்ளனர். இன்னும் 2,91,797 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement

தாராவி:

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் 7 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தாராவிப் பகுதியில் மட்டும் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,945 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2,530 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தாராவியில் தற்போது 144 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாராவியில் கடந்த 5 நாள்களாக தலா 20-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.