இந்தியா

பிகாரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

DIN

பிகார் மாநிலத்தின் தர்பங்காவில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பீகாரில் உள்ள தர்பங்காவில் புதிய அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) நிறுவ ஒப்புதல் அளித்துள்ளது, இது பிரதான் மந்திரி ஸ்வஸ்திய சுரக்ஷா யோஜனாவின் (பி.எம்.எஸ்.எஸ்.ஒய்) கீழ் நிறுவப்படும்.

பிகார் மாநிலத்தில் ரூ.1264 கோடி நிதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த புதிய எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவ மற்றும் செவிலியர் படிப்புகளுக்கான கற்பித்தல், குடியிருப்பு வளாகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

750 படுக்கைகள் திறன் கொண்டதாக அமைக்கப்படும் இந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு, ஆயுஷ் பிரிவு, கலையரங்கம், இரவு விடுதிகள், விருந்தினர் மாளிகை மற்றும் குடியிருப்பு வசதிகள் போன்றவை இடம்பெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.புதிய எய்ம்ஸ் கட்டுமானத்திற்கு மத்திய அரசு முழு நிதியுதவி அளிப்பதாக கூறப்பட்டுள்ளது.

பிகாரில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி 48 மாதத்தில் நிறைவு பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

SCROLL FOR NEXT