மகாராஷ்டிரத்தில் புதிதாக 247 காவலர்களுக்கு கரோனா
மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 247 காவலர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 247 காவலர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. கரோனா தொற்றுக்கு மருத்துவர்கள், தூய்மைப்பணியாளர்கள் போன்ற முன்களப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில் மகாராஷ்டிரத்தில் தொற்றால் பாதிக்கப்படும் காவலரக்ளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 247 காவலர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
Advertisement
இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 20,003-ஆக அதிகரித்துள்ளது. இதில் 3,728 காவலர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தொற்றிலிருந்து 16,071 காவலர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
புதிதாக 2 காவலர்கள் உயிரிழந்ததால், மொத்தமாக கரோனா தொற்றுக்கு உயிரிழந்த காவலர்களின் எண்ணிக்கை 204-ஆக அதிகரித்துள்ளது.