இந்தியா

கரோனாவிலிருந்து ஒரே நாளில் 82,961 பேர் மீண்டனர்

DIN

புது தில்லி: இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைவோர் தொடர்ந்து அதிகரித்து வருகிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் மிக அதிக அளவாக 82,961 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் வீதம் 78.53% ஆக அதிகரித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக நாட்டில் கரோனாவிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 39,42,360 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரத்தில் 19,423 பேரும், ஆந்திரப் பிரதேசத்தில் 9,628 பேரும், கர்நாடகத்தில் 7,406 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 6,680 பேரும், தமிழகத்தில் 5,735 பேரும் குணமடைந்துள்ளனர். இந்த ஐந்து மாநிலங்களில் இருந்து 35.5% பேர் குணமடைந்துள்ளனர். சிகிச்சை பெறுபவர்களும் இந்த மாநிலங்களில் தான் சுமார் 60% பேர் உள்ளனர்.

நாட்டில் தற்போது, 9,95,933 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைந்தோர் மற்றும் சிகிச்சை பெறுபவர்களுக்கான இடைவெளி 29 லட்சத்தைக் கடந்துவிட்டது. சிகிச்சை பெறுபவர்களை விட, குணமடைந்தோர் எண்ணிக்கை சுமார் 4 மடங்கு அதிகமாக உள்ளது.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 90,123 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் தொண்டை வலி, இருமலுடன் காய்ச்சல்: சீசன் நோயாக மாறியதா கரோனா?

பாலியல் புகாரில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை: எச்டி குமாரசாமி உறுதி

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

SCROLL FOR NEXT