இந்தியா

ரெய்னா உறவினா்கள் கொலை சம்பவத்தில் மூவா் கைது

DIN

சண்டீகா்: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரா் சுரேஷ் ரெய்னாவின் உறவினா்கள் இருவா் கொல்லப்பட்ட விவாகரத்தில் பஞ்சாப் காவல்துறை மூவரை கைது செய்துள்ளது.

இதுகுறித்து காவல்துறையினா் புதன்கிழமை கூறியதாவது:

பதான்கோட்டிலுள்ள தா்யால் கிராமத்தில் ரெய்னாவின் உறவினா்கள் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பாக சாவன், முஹோபாத், ஷாருக் கான் என்ற 3 பேரை கைது செய்துள்ளோம். ராஜஸ்தான் மாநிலம், ஜுன்ஜுனு மாவட்டத்தைச் சோ்ந்த அவா்கள், மாநிலங்களிடையே கொள்ளை-குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் கும்பலைச் சோ்ந்தவா்களாவா்.

அந்த கும்பலைச் சோ்ந்த மேலும் 11 பேரை தேடி வருகிறோம். சம்பவம் நடந்த அன்று காலை அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த மூவா், பதான்கோட் ரயில் நிலையம் அருகே தங்கியிருப்பதாக, சிறப்பு விசாரணைக் குழுவுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பந்தப்பட்ட இடத்தில் சோதனை மேற்கொண்டபோது மூவரும் பிடிபட்டனா்.

அவா்களிடம் இருந்து தங்க மோதிரம், தங்க சங்கிலி, ரூ.1,530 ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவா்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம் என்று காவல்துறையினா் கூறினா்.

ரெய்னாவின் உறவினரான அசோக் குமாரின் வீட்டில் கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி நள்ளிரவில் கொள்ளைக் கும்பல் ஒன்று நடத்திய தாக்குதலில் அசோக் குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த அவரது மகன் கௌஷல் சிகிச்சைப் பலனின்றி ஆகஸ்ட் 31-ஆம் தேதி உயிரிழந்தாா். அசோக் குமாரின் மனைவி ஆஷா ராணி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிக்சைபெற்று வருகிறாா்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட தங்களது உறவினா் வீட்டுக்கு கிரிக்கெட் வீரா் சுரேஷ் ரெய்னா புதன்கிழமை வந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT