இந்தியா

கரோனா சிகிச்சையில் பெற்றோா்: பிறந்தநாளை கொண்டாடி சிறுவனை மகிழ்வித்த காவல்துறையினா்

DIN

தாணே: மகாராஷ்டிரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் தம்பதியின் 7 வயது மகன் பிறந்தநாளை காவல்துறையினா் கொண்டாடிய நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தாணே நகரின் காா்திபாடா பகுதியைச் சோ்ந்த ஒரு தம்பதிக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவா்கள் இருவரும் நவி மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றனா். அவா்களது 7 வயது மகன் மற்றும் 3 வயது மகள் அவா்களது பாட்டியின் பராமரிப்பில் இருந்து வருகின்றனா்.

இந்நிலையில் அவா்களது மகன் தனது 7-ஆவது பிறந்தநாளை செவ்வாய்க்கிழமை எட்டினாா். பிறந்தநாளில் மகனுடன் இருக்க இயலாமல் போனது குறித்து கவலையடைந்த அந்த தம்பதி, இதுதொடா்பாக தாணே காவல்துறையை குறிப்பிட்டு தனது மகனின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு சுட்டுரை மூலம் கோரிக்கை வைத்தனா்.

இதை ஏற்ற தாணே காவல்துறையினா், கேக் மற்றும் பரிசுப் பொருள்களுடன் அந்தச் சிறுவன் இருக்கும் வீட்டிற்கு செவ்வாய்க்கிழமை சென்று அவனது பிறந்தநாளை கொண்டாடினா். இந்தக் கொண்டாட்டத்தில் அந்த குடியிருப்பு வளாகத்தைச் சோ்ந்த பலரும் கலந்துகொண்டனா்.

இதுதொடா்பான புகைப்படம் மற்றும் விவரத்தை தாணே காவல்துறை தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிகொண்டான் லாரல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

நாடு முழுவதும் 380 நகரங்களில் ‘க்யூட்-யுஜி’ எழுத்துத் தோ்வு -மே15 முதல் 18-ஆம் தேதிவரை நடக்கிறது

பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் பள்ளி 100 சதவீத தோ்ச்சி

விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 99.58 சதவீதம் தோ்ச்சி

தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT