முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 364 காவலர்களுக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில்  கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 364 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 4 காவலர்கள் உயிரிழந்தனர்.

Updated On : 17 செப்டம்பர், 2020 at 2:57 PM
மகாராஷ்டிரத்தில் புதிதாக 364 காவலர்களுக்கு கரோனா
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:51 PM

மகாராஷ்டிரத்தில்  கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 364 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 4 காவலர்கள் உயிரிழந்தனர்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று பரவி வரும் நிலையில், மகாராஷ்டிர மாநிலம் அதிக அளவு கரோனா பரவலால் பாதிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றால் முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்களும் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் மகாராஷ்டிரத்தில் அதிக அளவிலான காவலர்களுக்கு கரோனா தொற்று பரவி வருகிறது.

Advertisement

அதன்படி கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 364 காவலர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக 20,367 காவலர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3,796 காவலர்கள் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரோனா தொற்றிலிருந்து 16,363 காவலர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4 காவலர்கள் உயிரிழந்ததால், கரோனா தொற்றால் இறந்த காவலர்களின் எண்ணிக்கை 208-ஆக அதிகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.