நாட்டில் குணமடைந்தோர் விகிதம் 78.64 சதவிகிதமாக உயர்வு!
நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் விகிதம் 78.64 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் விகிதம் 78.64 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:
நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 51,18,253 பேரில் 40,25,079 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். கடந்த இரு தினங்களில் மட்டும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 82,000-க்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து கரோனா மீட்பு விகிதம் 78.64 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. மேலும் இன்றைய நிலவரப்படி, சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 10,09,976 ஆக உள்ளது.
Advertisement
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 97,894 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மொத்த கரோனா பாதிப்பு 51,18,253 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 1,132 பேர் உள்பட இதுவரை 83,198 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கரோனா பாதிப்பு நிலவரம்
பாதிப்பு: 51,18,253
பலி: 83,198
குணமடைந்தோர்: 40,25,079
சிகிச்சை பெற்று வருவோர்: 10,09,976