பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா 
இந்தியா

கரோனா: 3%-க்கும் குறைவான பழங்குடி மக்கள் பாதிப்பு

நாட்டில் 177 மாவட்டங்களிலுள்ள பழங்குடி மக்களில் 3 சதவிகிதத்திற்கும் குறைவான மக்களே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா தெரிவித்துள்ளார்.

DIN

நாட்டில் 177 மாவட்டங்களிலுள்ள பழங்குடி மக்களில் 3 சதவிகிதத்திற்கும் குறைவான மக்களே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது பதிலளித்த மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா, பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் கரோனா தொற்று பெரிய பாதிப்புகளை ஏதும் இதுவரை ஏற்படுத்தவில்லை எனக் கூறினார்.

ஐ.ஐ.டி. நடத்திய ஆய்வின்படி, நாட்டில் 177 மாவட்டங்களிலுள்ள பழங்குடி மக்கள்தொகையில் 3 சதவிகிதத்திற்கும் குறைவான மக்களே கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை சுட்டிக்காட்டினார்.

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழங்குடி மக்களின் ஆரோக்கியத்தையும், வாழ்வாதாரத்தையும் காக்கும் வகையில் பழங்குடியினர் நலத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் நியாயவிலைப் பொருள்கள், கிராமங்களிலிருந்து தண்ணீர், கரோனாவால் தனிமைப்படுத்தும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்துடன் இணைந்து கிராம பஞ்சாயத்துகள் மற்றும் கிராமங்களின் அளவிற்கு இடையே உள்ள இடைவெளிகளை கண்டறிவதையும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் செய்து வருகிறது.

நிதி ஆயோக், மத்திய சுகாதாரத்துறை, ஆயுஷ் மற்றும் மாநில அரசுகளுடன் இணைந்து பழங்குடி மக்களுக்கான திட்டங்களை பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் செய்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூரில் பரவலாக மழை

தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்டோா் காயம்

’வன்னியா் சங்க கட்டடம் இப்போதுள்ள நிலையே தொடரலாம்’: உச்சநீதிமன்றம் உத்தரவு

பூட்டிய வீட்டில் நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருட்டு

அரசுப் பேருந்து சேதம்: இளைஞா் கைது

SCROLL FOR NEXT