முகப்பு
இந்தியா

தொடர்ந்து 2 நாள்களாக 82 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணம்

நாட்டில் தொடர்ந்து 2 நாள்களாக கரோனாவில் இருந்து 82 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக கரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 40 லட்சத்தைத் தாண்டியது.

Updated On : 17 செப்டம்பர், 2020 at 3:07 PM
தொடர்ந்து 2 நாள்களாக 82 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:51 PM

புது தில்லி: நாட்டில் தொடர்ந்து 2 நாள்களாக கரோனாவில் இருந்து 82 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக கரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 40 லட்சத்தைத் தாண்டியது.

கடந்த சில நாள்களாக மிக அதிக எண்ணிக்கையில் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வருகிறார்கள். தொடர்ந்து இரண்டு நாள்களாக இந்த எண்ணிக்கை 82 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 82,961 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். மிக அதிக அளவில் குணமடைபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால், தேசிய குணமடைதல் வீதமும் உயர்ந்து வியாழக்கிழமை காலை நிலவரப்படி நாட்டில் குணமடைவோர் சதவீதம் 78.64 சதவீதத்தைத் தொட்டுள்ளது. நாட்டில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 40 லட்சத்தைத் (40,25,079) தாண்டியுள்ளது. இது, தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கையைவிட 30 லட்சம் (30,15,103) அதிகம் ஆகும்.

Advertisement

அதிக அளவிலான குணமடைபவர்களின் எண்ணிக்கையின் காரணமாக, கடந்த 30 நாட்களில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 100 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரத்தில் 17,559 பேர் குணமடைந்துள்ளனர். இது மொத்த குணமடைந்தோரில் ஐந்தில் ஒரு பங்கு (21.22%) ஆக உள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில், 10,845 பேரும், கர்நாடகத்தில் 6,580 பேரும், உத்திரப் பிரதேசத்தில் 6,476 பேரும், தமிழ்நாட்டில் 5,768 பேரும் குணமடைந்துள்ளனர். இந்த 5 மாநிலங்கள் சேர்ந்து 35.87 சதவீதம் குணமடைதல்களுக்கு காரணமாக உள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.