இந்தியா

ஒடிசாவில் புதிதாக 4,241 பேருக்கு கரோனா: மேலும் 13 பேர் பலி

DIN

ஒடிசாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4,241 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது. மேளும் 13 பேர் உயிரிழந்தனர்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஒடிசாவில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக ஒடிசா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4,241 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,67,161-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு 36,580 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா வைரஸ் தொற்றிலிருந்து  1,29,859 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நேற்று (புதன்கிழமை) மட்டும் 51,824 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக 26.19 லட்சம் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

ஒடிசாவில் இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பிளாஸ்மா முறை மூலம் சிகிச்சை பெற்றுள்ளனர். கரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக சிறப்பு கனவம் எடுத்துக்கொள்ளும் வகையில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது'' இவ்வாறு சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப நோய்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT