முகப்பு
இந்தியா

உ.பி.: கரோனாவால் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

உத்தரப்பிரதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 81 பேர் உயிரிழந்ததால், மொத்தமாக கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,771-ஆக அதிகரித்துள்ளது.

Updated On : 17 செப்டம்பர், 2020 at 5:26 PM
உத்தரப்பிரதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 81 பேர் உயிரிழந்ததால், மொத்தமாக கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,771-ஆக அதிகரித்துள்ளது.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:51 PM

உத்தரப்பிரதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 81 பேர் உயிரிழந்ததால், மொத்தமாக கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,771-ஆக அதிகரித்துள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது, அந்தவகையில் உத்தரப்பிரதேசத்தில் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது குறித்து உத்தரப்பிரதேச அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புதிதாக 6,029 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,36,294-ஆக உள்ளது.

Advertisement

இதில் கரோனா தொற்றுக்கு 68,235 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தொற்றிலிருந்து 2,63,288 பேர் குணமடைந்துள்ளனர்.

நேற்று (புதன்கிழமை) ஒருநாளில் மட்டும் 1,51,693 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக 80.89 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 81 பேர் உயிரிழந்ததால், கரோனா தொற்றுக்கு இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,771-ஆக அதிகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.