ஆந்திரத்தில் 6 லட்சத்தை கடந்த கரோனா பாதிப்பு
ஆந்திரத்தில் புதிதாக 8,096 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 67 பேர் உயிரிழந்தனர்.
ஆந்திரத்தில் புதிதாக 8,096 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 67 பேர் உயிரிழந்தனர்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஆந்திரத்தில் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இது குறித்து ஆந்திர சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 8,096 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,09,558-ஆக அதிகரித்துள்ளது.
Advertisement
கரோனாவால் பாதிக்கப்பட்டு 84,423 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதிதாக 11,803 பேர் தொற்றிலிருந்து குணமடைந்ததால், மொத்தமாக கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5,19,891-ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 67 பேர் உயிரிழந்ததால், மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,244-ஆக அதிகரித்துள்ளது'' இவ்வாறு சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.