ஜார்கண்ட்: ரயில்வே ஆய்வு வாகனம் மோதி யானை பலி
ஜார்கண்டில் ரயில்வே ஆய்வு வாகனம் மோதிய விபத்தில் காட்டு யானை உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்டில் ரயில்வே ஆய்வு வாகனம் மோதிய விபத்தில் காட்டு யானை உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தின் சைபாசா மாவட்டத்தில் உள்ள சிங்பும் பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட அதிவேகமாக வந்த ரயில்வே ஆய்வு வாகனம் காட்டுயானை மீது மோதி விபத்துக்குள்ளானது.
சரந்தா காட்டுப்பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ள பகுதியில் ரயில்வே ஆய்வு வாகனம் அதிவேகத்தில் சென்றதே விபத்துக்கு காரணம் என்று மண்டல வனத்துறை அலுவலர் ராஜ்னிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
நிர்ணயிக்கப்பட்ட 40 கிலோ மீட்டர் வேகத்தை விட அதிக வேகத்தில் ரயில்வே ஆய்வு வாகனம் சென்று யானை மீது மோதியதால், காட்டு யானை உயிரிழந்ததாகவும் அவர் கூறினார்.
இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், உடற்கூறு ஆய்வுக்கு பிறகு யானை புதைக்கப்படும் என்றும் மண்டல வனத்துறை அலுவலர் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.