முகப்பு
இந்தியா

கரோனா: ஒரே நாளில் குணமடைந்தோர் எண்ணிக்கை 96 ஆயிரத்தை நெருங்கியது

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை ஒரே நாளில் 96 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

Updated On : 19 செப்டம்பர், 2020 at 11:53 AM
கரோனா: ஒரே நாளில் குணமடைந்தோர் எண்ணிக்கை 96 ஆயிரத்தை நெருங்கியது
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:52 PM

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை ஒரே நாளில் 96 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 53 லட்சத்தை அடைந்துள்ளது.

இதனிடையே இன்று (சனிக்கிழமை) காலை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 24 மணிநேரத்தில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 95,880-ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

புதிதாக 93,337 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 53,08,014-ஆக அதிகரித்துள்ளது. 

கரோனா தொற்றிலிருந்து மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை  42,08,431-ஆக உயர்ந்துள்ளது. இதனால் குணமடைவோர் விகிதம் 79.28 சதவிகிதமாக உள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,247 பேர் உயிரிழந்ததால், மொத்தமாக உயிரிழ்ந்தோரின் எண்ணிக்கை 85,619-ஆக அதிகரித்துள்ளது. இதனால் இறப்பு விகிதம் 1.61 சதவிகிதமாக உள்ளது.

நாட்டில் 10,13,964 பேர் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் சிகிச்சை பெற்று வருவோர் விகிதம் 19.10 சதவிகிதமாக உள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவலின்படி கடந்த 24 மணிநேரத்தில் 8,81,911 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 6,24,54,254-ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி 20 லட்சமாக இருந்த கரோனா பாதிப்பு, ஆகஸ்ட் 23-ஆம் தேதி 30 லட்சமாக அதிகரித்தது. செப்டம்பர் 5-ஆம் தேதி 40 லட்சமாக இருந்த நிலையில், செப்டம்பர் 16-ஆம் தேதி 50 லட்சமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.