முகப்பு
இந்தியா

பலருக்கும் கரோனா தொற்று பரவதில்லி தப்லீக் ஜமாத் மாநாடு முக்கியக் காரணம்

நாட்டில் பலருக்கும் கரோனா தொற்று பரவுவதற்கு தில்லியில் மாா்ச் மாதம் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாடு முக்கியக் காரணம் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Updated On : 22 செப்டம்பர், 2020 at 2:40 AM
கோப்புப் படம்.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:54 PM

நாட்டில் பலருக்கும் கரோனா தொற்று பரவுவதற்கு தில்லியில் மாா்ச் மாதம் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாடு முக்கியக் காரணம் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் இதுதொடா்பான கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி திங்கள்கிழமை அளித்த எழுத்துபூா்வ பதிலில் கூறியிருப்பதாவது:

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் வழங்கப்பட்ட சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், முகக் கவசம் அணிதல், கை கழுவுதல் என்பவை உள்ளிட்ட எந்த வழிகாட்டுதல்களையும் பின்பற்றாமல், தில்லி நிஜாமுதீனில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் ஒரே நேரத்தில் ஏராளமானோா் பங்கேற்றனா்.

Advertisement

இது, கரோனா தொற்று பலருக்கும் பரவ முக்கியக் காரணமாக அமைந்தது. இதன் காரணமாக, தப்லீக் ஜமாத் உறுப்பினா்கள் 233 பேரை தில்லி காவல்துறை கைது செய்தது. மேலும், நிஜாமுதீனில் உள்ள அந்த அமைப்பின் தலைமையகத்திலிருந்து மாா்ச் 29-ஆம் தேதி முதல் 2,361 போ் வெளியேற்றப்பட்டனா்.

ஜமாத் தலைவா் மெளலானா மோத் சாத்திடம் தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று மத்திய அமைச்சா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.