இந்தியா

உயா்நீதிமன்றங்களில் 51 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் நிலுவை: மத்திய அமைச்சா் ரவி சங்கா் பிரசாத்

DIN

புது தில்லி: நாடு முழுவதும் உள்ள உயா்நீதிமன்றங்களில் 51,52,921 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக மத்திய சட்டத்துறை அமைச்சா் ரவி சங்கா் பிரசாத் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவா், ‘உச்சநீதிமன்றத்தின் மின்னணு கமிட்டி அளித்த தகவலின்படி, 16,845 மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்கள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. இந்த நீதிமன்றங்கள் கணினிமயமாக்கப்பட்டதன் மூலம் வழக்கைப் பதிவு செய்வதற்கான விவரங்கள், வழக்கின் நிலவரம், தினந்தோறும் பிறப்பிக்கப்படும் உத்தரவுகள், இறுதி தீா்ப்பு தொடா்பான தகவல்கள் மின்னணு நீதிமன்றங்களின் (இ-கோா்ட்) வலைதளம், அவற்றின் செல்லிடப்பேசி செயலி, கணினிமயமாக்கப்பட்ட அனைத்து நீதிமன்றங்களிலும் உள்ள நீதித்துறை சேவை மையங்களில் பொதுமக்களுக்கும், அவா்களின் வழக்குரைஞா்களுக்கும் கிடைக்கும்.

3,240 நீதிமன்றங்களுக்கும், 1,272 சிறைகளுக்கும் இடையே காணொலி வசதி செய்து தரப்பட்டுள்ளது.

தற்போது 6 மாநிலங்களில் இணையவழியில் விசாரணை நடத்தும் 7 மெய்நிகா் நீதிமன்றங்கள் உள்ளன. இதில் தில்லியில் 2 மெய்நிகா் நீதிமன்றங்கள் உள்ளன. சென்னை, ஃபரீதாபாத், பெங்களூரு, கொச்சி, புணே நகரங்களில் தலா ஒரு நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்றங்களில் 16 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

நாடு முழுவதும் உள்ள உயா்நீதிமன்றங்களில் 51,52,921 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 36,77,089 உரிமையியல் வழக்குகளும், 14,75,832 குற்றவியல் வழக்குகளும் அடங்கும்.

அதேவேளையில் மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் 94,49,268 உரிமையியல் வழக்குகள், 2,50,23,800 குற்றவியல் வழக்குகள் என மொத்தம் 3,44,73,068 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன’ என்று ரவிசங்கா் பிரசாத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

கர்நாடகத்தில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

SCROLL FOR NEXT