முகப்பு
பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு
இந்தியா

பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடியுடன் திமுக எம்.பி.க்கள் டி.ஆர். பாலு, திருச்சி சிவா, கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

இந்தியா

பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடியுடன் திமுக எம்.பி.க்கள் டி.ஆர். பாலு, திருச்சி சிவா, கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:24 PM
பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு
பகிர்:

புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடியுடன் திமுக எம்.பி.க்கள் டி.ஆர். பாலு, திருச்சி சிவா, கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

புது தில்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த திமுக எம்.பி.க்கள், காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக நேரில் சந்தித்துப் பேசியதாகக் கூறினர்.

அப்போது, மேக்கேதாட்டு பகுதியில் காவிரியின் குறுக்கே அணைகட்ட கர்நாடகாவுக்கு அனுமதி தரக் கூடாது என்று ஸ்டாலின் எழுதிய கடிதத்தை பிரதமரிடம் வழங்கினோம்.  மேக்கேதாட்டு அணையைக் கட்ட அனுமதி வழங்கக் கூடாது என்று பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி இதுவரை வலியுறுத்தவில்லை என்று டி.ஆர். பாலு தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது, தமிழகத்துக்குப் பாதகமாக எந்த முடிவும் எடுக்கமாட்டேன் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிமொழி அளித்ததாகவும், அதை திமுக தலைவர் ஸ்டாலினிடம் தெரிவிக்கச் சொன்னதாகவும் டி.ஆர். பாலு கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →