இந்தியா

டிரம்ப் வந்தபோது கரோனா பரிசோதனைக்கான தேவையில்லை: முரளீதரன்

DIN


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா வந்தபோது கரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கான தேவையில்லை என வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளீதரன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அவர் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவுக்கு வருகை தந்தபோது, வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் கட்டாயம் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்ற தேவை இல்லை. கரோனா உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்குப் பரவக் கூடிய நோய்த் தொற்று என்று உலக சுகாதார அமைப்பு மார்ச் 11-ம் தேதி தான் அறிவித்தது.

இந்தியாவிலுள்ள 21 சர்வதேச விமானங்களிலும் வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் கட்டாயம் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்ற நடைமுறையை மத்திய அரசு மார்ச் 4-ம் தேதி முதலே அமலுக்குக் கொண்டு வந்தது. 

அதனால், டிரம்ப் வருகையின்போது, முக்கியத் தலைவர்களின் வருகைக்கு மத்திய அரசால் கடைப்பிடிக்கப்படும் பொதுவான நடைமுறைகளே கடைப்பிடிக்கப்பட்டன." 

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வந்தபோது, அவருக்கோ, அவருடன் வந்த அதிகாரிகளுக்கோ கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதா என்ற கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாறு காணாத உச்சம்.. மகிழ்ச்சியில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்!

பெண்களுக்கு சமஅதிகாரமளிக்கும் இந்தியாவை உருவாக்குவோம் - சோனியா

மாட்டிறைச்சி தயார் செய்து வையுங்கள்: அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் பதில்!

திரைப்படமாகும் கருப்பின நாயகனின் வாழ்க்கை!

எப்படி இருந்திருக்க வேண்டியவர்... பிரபல நடிகருக்கு என்ன ஆனது?

SCROLL FOR NEXT