உயரும் கரோனா தொற்று: 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை
கரோனா அதிகம் பாதித்த நாட்டின் 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி புதன்கிழமை ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா அதிகம் பாதித்த நாட்டின் 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி புதன்கிழமை ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கரோனா பாதிப்பு குறித்து பிரதமர் மோடி புதன்கிழமை ஆலோசனையில் ஈடுபட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரம், ஆந்திரம், கர்நாடகம், உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு , தில்லி மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் அதிக அளவிலான கரோனா தொற்று பாதிப்புகள் பதிவாகி உள்ளன. நாட்டின் மொத்த கரோனா பாதிப்புகளில் 63 சதவிகிதத்தை இந்த மாநிலங்கள் கொண்டுள்ளன.
Advertisement
கரோனா தொற்று எண்ணிக்கையில் பஞ்சாப் மற்றும் தில்லி உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சமீபத்தில் தினசரி விகிதம் அதிகரித்துள்ளன. இந்நிலையில் புதன்கிழமை பிரதமர் நரேந்திரமோடி மேற்கூரிய மாநில முதல்வர்கள் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.