முகப்பு
இந்தியா

உ.பி.: புதிதாக 4,674 பேருக்கு கரோனா: மேலும் 68 பேர் பலி

உத்தரப்பிரதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4,674 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 68 பேர் உயிரிழந்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:25 PM
உத்தரப்பிரதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4,674 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று
பகிர்:

உத்தரப்பிரதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4,674 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 68 பேர் உயிரிழந்தனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. அந்தவகையில் உத்தரப்பிரதேசத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக உத்தரப்பிரதேச அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''புதிதாக 4,674 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,74,277-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு 61,300 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4,922 பேர் குணமடைந்த நிலையில், மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 3,07,611-ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக 68 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தமாக கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,366-ஆக அதிகரித்துள்ளது'' இவ்வாறு சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.