இந்தியா

இந்தியாவில் 58 லட்சத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு

DIN

புது தில்லி: நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 58,18,570 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 86,052 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மேலும் கூறியதாவது:

வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 1,141 போ் கரோனாவால் உயிரிழந்துவிட்டனா். இதனால் மொத்த கரோனா உயிரிழப்பு 92,290 ஆக அதிகரித்துள்ளது. எனினும் மொத்த பாதிப்புடன் ஒப்பிடும்போது உயிரிழப்பு விகிதம் 1.59 ஆக உள்ளது. இதுவரை 47,56,164 போ் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனா். குணமடைந்தோரின் விகிதம் 81.79 ஆக உயர்ந்துள்ளது. 

இப்போதைய நிலையில் நாட்டில் 9,70,116 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். இது மொத்த பாதிப்பில் 16.67 சதவீதமாகும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி வியாழக்கிழமை வரை 6,89,28,441 கரோனா பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. இதில் வியாழக்கிழமை மட்டும் 14,92,409 பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக 34,345 போ் கரோனாவுக்கு பலியாகிவிட்டனா். கா்நாடகத்தில் 8,331பேரும், ஆந்திரத்தில் 5,558 பேரும், உத்தர பிரதேசத்தில் 5,299 பேரும், தில்லியில் 5,087 பேரும், மேற்கு வங்கத்தில் 4,544 பேரும், குஜராத்தில் 3,367 பேரும், பஞ்சாபில் 2,990 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 2,077 பேரும் உயிரிழந்துள்ளனா். மற்ற மாநிலங்களில் உயிரிழப்பு 2 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி இந்தியாவில் கரோனா பாதிப்பு 20 லட்சத்தைக் கடந்தது. அதன் பிறகு ஆகஸ்ட் 23-இல் 30 லட்சமாக அதிகரித்தது. செப்டம்பா் 5-ஆம் தேதி 40 லட்சத்தை எட்டிய பாதிப்பு, செப்டம்பா் 16-ஆம் தேதி 50 லட்சத்தைக் கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

SCROLL FOR NEXT