முகப்பு
இந்தியா

தெலங்கானாவில் புதிதாக 2,381 பேருக்கு கரோனா: 10 பேர் பலி

தெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,381 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

Updated On : 25 செப்டம்பர், 2020 at 11:41 AM
தெலங்கானாவில் கரோனா நிலவரம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:55 PM

தெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,381 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தெலங்கானாவில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக தெலங்கானா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 

Advertisement

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,381 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,81,627 ஆக உள்ளது. 

கடந்த இரு நாள்களில் 2,021 பேர் குணமடைந்த நிலையில், மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோரின் விகிதம் 82.67 ஆக உயர்ந்துள்ளது.

ஒருநாளில் மட்டும் 57,621 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும், 1,659 பேரின் மாதிரிகள் முடிவுக்காக காத்திருக்கின்றன. 

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 10 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு 1,080 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.