முகப்பு
இந்தியா

அசாமில் புதிதாக 1,792 பேருக்கு கரோனா

அசாமில்  கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,792 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Updated On : 26 செப்டம்பர், 2020 at 11:43 AM
அசாமில் புதிதாக 1,792 பேருக்கு கரோனா
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:56 PM

அசாமில்  கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,792 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அந்தவகையில் அசாமில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக அசாம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''அசாமில் புதிதாக 1,792 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,67,374-ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 31,605 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement

கரோனா வைரஸ் தொற்றிலிருந்து இதுவரை மொத்தமாக 1,35,141 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 625-ஆக அதிகரித்துள்ளது'' இவ்வாறு சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.