அமைச்சர் ஜாவடேகருக்கு முதல்வர் கேஜரிவால் கடிதம்
விவசாயக் கழிவுகளை எரிப்பது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் நலத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகருக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கடிதம் எழுதியுள்ளார்.
விவசாயக் கழிவுகளை எரிக்கும் பிரச்சனை தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் நலத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகருக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கடிதம் எழுதியுள்ளார்.
தில்லி, ஹரியாணா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அறுவடைப் பணிகளுக்குப் பிறகு விவசாயக் கழிவுகளை மட்க விடாமல் விவசாய நிலத்தில் வைத்தே விவசாயிகள் எரித்து வருகின்றனர்.
இதனால் தில்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றின் தரம் குறைந்து சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனிடையே இதனைக் கட்டுப்படுத்தும் விதமாகவும், விவசாயக் கழிவுகளை எளிதில் உரமாக மாற்றுவது குறித்தும் மத்திய சுற்றுச்சூழல் நலத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகருக்கு முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் விவசாயக் கழிவுகளை எளிதில் மட்கவைப்பது தொடர்பாக
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் கண்டறிந்த கருவியின் பயன்பாடு குறித்து விரிவாக குறிப்பிட்டுள்ளார்.
விவசாய கழிவுகளை உரமாக மாற்றும் குறைந்த விலையிலான இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் கண்டுபிடிப்பை நேற்று (வெள்ளிக்கிழமை) பார்வையிட்ட முதல்வர் கேஜரிவால் இது குறித்து அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.