முகப்பு
இந்தியா

இமாசல்: மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு கரோனா

இமாசலில் ஏற்கனவே 7 எம்.எல்.ஏக்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 26 செப்டம்பர், 2020 at 4:25 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:56 PM

இமாசலில் ஏற்கனவே 7 எம்.எல்.ஏக்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இமாசலில் ரோஹிரு தொகுதியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான லால் பிரக்தா கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று (வெள்ளிக்கிழமை) காலை கரோனா பரிசோதனை செய்திகொண்டார். இதில் நேற்று மாலையே கரோனா இருப்பது உறுதியானது. இதனையடுத்து மருத்துவர்களின் அறிவுரையின்படி மருத்துவமனையில் தனிமைப்படுத்திக்கொண்டார்.

இது குறித்து முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கடந்த 12 நாள்களாக சிம்லா பகுதியில் எந்த பொதுநிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள வில்லை. இதனால் பொதுமக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை. 

Advertisement

எனினும் எனது வீட்டிற்கு வந்து என்னை சந்தித்தவர்கள், தொடர்பில் இருந்தவர்கள் கரோனா பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இமாசலில் இதுவரை 6 பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களும், இரண்டு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.