முகப்பு
இந்தியா

ஒடிசாவில் இதுவரை இல்லாத அளவிற்கு கரோனா பாதிப்பு

ஒடிசாவில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 4,356 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 16 பேர் உயிரிழந்தனர்.

Updated On : 26 செப்டம்பர், 2020 at 2:16 PM
ஒடிசாவில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 4,356 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:56 PM

ஒடிசாவில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 4,356 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 16 பேர் உயிரிழந்தனர்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அந்தவகையில் ஒடிசாவில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக ஒடிசா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4,356 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு  2,05,452-ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

கரோனாவால் பாதிக்கப்பட்டு 39,184 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தொற்றிலிருந்து இதுவரை மொத்தமாக 1,65,432 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 16 பேர் உயிரிழந்ததால், கரோனா தொற்றுக்கு மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 783-ஆக அதிகரித்துள்ளது'' இவ்வாறு சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.