முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 327 காவலர்களுக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 327 காவலர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 23,360-ஆக அதிகரித்துள்ளது.

Updated On : 30 செப்டம்பர், 2020 at 3:49 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:58 PM

மகாராஷ்டிரத்தில் புதிதாக 327 காவலர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 23,360-ஆக அதிகரித்துள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதில் மகாராஷ்டிரத்தில் அதிக அளவில் கரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.

கரோனா தொற்றுக்கு முன்கள வீரர்களான காவலர்கள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

Advertisement

அந்தவகையில் மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 327 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 20,139-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு 2,975 காவலர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதிதாக மேலும் ஒரு காவலர் கரோனாவிற்கு உயிரிழந்ததால், மொத்தமாக கரோனாவால் உயிரிழந்த காவலர்களின் எண்ணிக்கை 246-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.