முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு 1,895 ஆக அதிகரிப்பு!

மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,895 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் ஒரேநாளில் 134 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 12 ஏப்ரல், 2020 at 2:23 PM
பகிர்:

மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,895 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் ஒரேநாளில் 134 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கரோனா தொற்று தீவிரமாகி வரும் பகுதிகள் மூடப்பட்டுள்ளன. சுமார் 85 ஹாட்ஸ்பாட் பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கை வருகிற ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டித்து அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். 

தொடர்ந்து, இன்றைய நிலவரப்படி, மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,895 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் ஒரேநாளில் 134 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை  8,356 ஆகவும், உயிரிழந்தோா் எண்ணிக்கை 273 ஆகவும் உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.