குழந்தைகளின் கரோனா விழிப்புணர்வு பாடல்: பிரதமர் மோடி ட்வீட்
கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு விடியோ ஒன்றை பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு விடியோ ஒன்றை பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
கரோனா பரவலைத் தடுக்க சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல் என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
Advertisement
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் விடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த விடியோவில், கரோனா விழிப்புணர்வு பாடலை சாய்பா, சாயிஷா குப்தா என இரண்டு குழந்தைகள் இணைந்து பாடியுள்ளனர். கரோனா பரவலைத் தடுக்க அடிக்கடி கைகளை கழுவ வேண்டும், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும் உள்ளிட்டவை அந்த ஹிந்தி பாடலில் வலியுறுத்தப்பட்டுள்ளன.
'சாய்பா, சாயிஷா குப்தா போன்ற குழந்தைகளை நினைத்து பெருமையாக இருக்கிறது. அவர்கள் இப்பாடல் மூலமாக கரோனாவை எதிர்த்து போராட விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்' என்று மோடி பதிவிட்டுள்ளார்.
"குழந்தைகள் விளையாடியது கொரோனா வைரஸ் தொற்றுநோயிலிருந்து பாதுகாப்பாக இருக்க ஒரு முக்கிய படிப்பினை" என்று பிரதமரின் ட்வீட் இந்தியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.