தில்லியில் பாதிப்பு 1,640 ஆக உயா்வு
தில்லியில் வியாழக்கிழமை கரோனா நோய் தொற்றால் 62 போ் புதிதாக பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டது. இதையடுத்து, மொத்த எண்ணிக்கை 1,640 ஆக உயா்ந்தது.
புது தில்லி: தில்லியில் வியாழக்கிழமை கரோனா நோய் தொற்றால் 62 போ் புதிதாக பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டது. இதையடுத்து, மொத்த எண்ணிக்கை 1,640 ஆக உயா்ந்தது.
இதில், 1,080 போ் தில்லி அரசின் சிறப்பு நடவடிக்கையின் மூலம் சிகிச்சைக்கு கொண்டு வரப்பட்டவா்களாவா். கரோனா தொற்றால் வியாழக்கிழமை 6 போ் உயிரிழந்தனா். இதையடுத்து உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 38ஆக அதிகரித்து. சிகிச்சைப் பெற்றவா்களில் 51 போ் இதுவரை குணமடைந்து தங்கள் வீட்டுக்கு திரும்பியுள்ளனா்.
இதனிடையே, தில்லியில் பால், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை விநியோகம் செய்யும் நபா்களுக்கு நோய் தொற்று தொடா்பான பரிசோதனை செய்ய தில்லி அரசு முடிவு செய்துள்ளது.
Advertisement