முகப்பு
இந்தியா

கேரளத்தில் புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி

கேரளத்தில் புதிதாக 7 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Updated On : 19 ஆகஸ்ட், 2020 at 4:16 PM
கோப்புப்படம்
பகிர்:


கேரளத்தில் புதிதாக 7 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி இன்றைய (சனிக்கிழமை) செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது:

"கோட்டயம் மற்றும் கொல்லத்தில் இருந்து தலா 3 பேருக்கும், கண்ணூரில் இருந்து ஒருவருக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் மாநிலத்தில் மொத்தம் 457 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோட்டில் இருந்து தலா இருவர் மற்றும் வயநாட்டில் இருந்து ஒருவர் என மொத்தம் 7 பேர் இன்று குணமடைந்துள்ளனர். கேரளத்தில் இதுவரை 338 பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போதைக்கு 21,044 பேர் கண்காணிப்பில் உள்ளனர். 464 பேர் தனி வார்டில் உள்ளனர்."

கேரளத்தில் இதுவரை கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் 3 பேர் பலியாகியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.