முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் 24 மணி நேரத்தில் 394 பேருக்கு கரோனா தொற்று உறுதி

​மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 394 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Updated On : 25 ஏப்ரல், 2020 at 4:17 PM
கோப்புப்படம்
பகிர்:


மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 394 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரம் இருந்து வருகிறது. இந்த நிலையில் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 394 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 6,817 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 18 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 300-ஐத் தாண்டி 301 ஆக உள்ளது.

Advertisement

நாடு முழுவதிலுமான நிலவரம் பற்றி மத்திய சுகாதாரத் துறை இன்று தெரிவித்ததாவது:

மொத்தம் பாதிப்பு: 24,506

சிகிச்சை பெற்று வருவோர்: 18,668

குணமடைந்தோர்/இடம்பெயர்ந்தோர்: 5,063

பலியானோர்: 775

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.