முகப்பு
இந்தியா

இந்தியாவில் கரோனா பாதிப்பு 26,917; பலி 826 ஆக உயர்வு: மத்திய சுகாதாரத் துறை

இந்தியாவில் கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 26,917 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

Updated On : 26 ஏப்ரல், 2020 at 6:09 PM
பகிர்:

இந்தியாவில் கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 26,917 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்நிலையில், இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 26,917 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 826 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 5,914 பேர் குணமடைந்து வீட்டிற்குத் திரும்பியுள்ளனர்.

Advertisement

இந்தியாவில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரம் இருக்கிறது. இங்கு தற்போது 7,628 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 323 பேர் உயிரிழந்துள்ளனர். அதைத் தொடர்ந்து குஜராத்தில் 3,071 பேரும், தில்லியில் 2,625 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.