முகப்பு
இந்தியா

இந்தியாவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்குகிறது: மத்திய சுகாதாரத் துறை

இந்தியாவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்குவதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஏப்ரல், 2020 at 5:56 PM
பகிர்:


புது தில்லி: இந்தியாவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்குவதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

செவ்வாய்கிழமை மாலை நிலவரப்படி இந்தியாவில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 29,974 ஆக உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,594 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 51 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

Advertisement

தற்போது மருத்துவமனைகளில் 20,010 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 7,027 பேர் குணமடைந்துள்ளனர், 937 பேர் மரணம் அடைந்துவிட்டனர்.
 

மேலும், இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 8,590 பேருக்கும், குஜராத்தில் 3,548 பேருக்கும், தில்லியில் 3,108 பேருக்கும், தமிழகத்தில் 1,937 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.