முகப்பு
இந்தியா

கடந்த 24 மணி நேரத்தில் 1,543 பேருக்கு கரோனா; 62 பேர் பலி: மத்திய சுகாதாரத் துறை

கடந்த 24 மணி நேரத்தில் 1,543 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

Updated On : 28 ஏப்ரல், 2020 at 5:55 PM
பகிர்:

கடந்த 24 மணி நேரத்தில் 1,543 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் இன்று பிற்பகல் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தபோது கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 1,543 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 62 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் 644 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

Advertisement

தற்போது 29,435 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பு 934 ஆக உள்ளது. கரோனா மீட்பு விகிதம் 23.3% ஆக அதிகரித்துள்ளது. இதுவரை மொத்தம்,6,869 பேர் குணமடைந்துள்ளனர்

கடந்த 28 நாள்களில் 17 மாவட்டங்களில் யாருக்கும் கரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிவித்தார். 

மேலும், கரோனாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை பரிசோதனை  மேற்கொள்வது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.