கடந்த 7 நாள்களில் 80 மாவட்டங்களில் ஒருவருக்குக் கூட கரோனா பாதிப்பு இல்லை: மத்திய அமைச்சர்
கடந்த 7 நாள்களில் 80 மாவட்டங்களில் ஒருவருக்குக் கூட கரோனா தொற்று ஏற்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல் தெரிவித்துள்ளார்.
கடந்த 7 நாள்களில் 80 மாவட்டங்களில் ஒருவருக்குக் கூட கரோனா தொற்று ஏற்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல் தெரிவித்துள்ளார்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் இன்று பல்வேறு மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் காணொலி மூலமாக ஆலோசனை நடத்தினார் .
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'நாட்டில் 80 மாவட்டங்களில் கடந்த 7 நாள்களில் கரோனா வழக்குகள் எதுவும் பதிவாகவில்லை. அதேபோன்று கடந்த 14 நாள்களில் 47 மாவட்டங்களில், கடந்த 21 நாள்களில் 39 மாவட்டங்களில் ஒருவர் கூட கரோனாவால் பாதிக்கப்படவில்லை. அதேபோன்று கடந்த 28 நாள்களில் 17 மாவட்டங்களில் யாருக்கும் தொற்று இல்லை.
Advertisement
மேலும், தற்போது 129 மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்ட ஹாட்ஸ்பாட் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில், 16 மாவட்டங்களில் இருந்து கரோனாவால் ஒருவருக்குக் கூட பாதிப்பு ஏற்படவில்லை.
அதே நேரத்தில் இந்தியாவில் கரோனா பாதிப்பு 29,435 ஆக உயர்ந்துள்ளன, இதில் 21,632 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 6,869 பேர் குணப்படுத்தப்பட்டுள்னர். 934 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன' என்று தெரிவித்தார்.