முகப்பு
உலகம்

சிங்கப்பூரில் புதிதாக 528 பேருக்கு கரோனா தொற்று உறுதி

​சிங்கப்பூரில் புதிதாக 528 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் இன்று (செவ்வாய்கிழமை) தெரிவித்தது.

Updated On : 28 ஏப்ரல், 2020 at 5:01 PM
கோப்புப்படம்
பகிர்:


சிங்கப்பூரில் புதிதாக 528 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் இன்று (செவ்வாய்கிழமை) தெரிவித்தது.

சிங்கப்பூரில் புதிதாக கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிப்புக்குள்ளானோர் பற்றிய சமீபத்திய தகவலை அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 28, 2020 நண்பகல் 12 மணி நிலவரப்படி, புதிதாக 528 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் வெளிநாட்டு தொழிலாளர்கள். 8 பேர் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள்/சிங்கப்பூரின் நிரந்தரக் குடிமக்கள். 

இதைத் தொடர்ந்து அந்த நாட்டில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 14,951 ஆக உயர்ந்துள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 12 ஆக உள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.