முகப்பு
இந்தியா

கடந்த 24 மணி நேரத்தில் 1,718 பேருக்கு கரோனா: மத்திய சுகாதாரத் துறை

கடந்த 24 மணி நேரத்தில் 1,718 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தகவல் தெரிவித்துள்ளார். 

Updated On : 30 ஏப்ரல், 2020 at 5:00 PM
பகிர்:

கடந்த 24 மணி நேரத்தில் 1,718 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தகவல் தெரிவித்துள்ளார். 

இன்று பிற்பகல்  செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், 'இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 1,718 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 630 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது 33,050 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பு 1,074  ஆக உள்ளது. கரோனா மீட்பு விகிதம் 25.19% ஆக அதிகரித்துள்ளது. இதுவரை மொத்தம் 8,325 பேர் குணமடைந்துள்ளனர். கரோனா இரட்டிப்பு விகிதமாகும் கால அளவு 11 10.1 லிருந்து 11 நாள்களாக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 3.2% ஆக உள்ளது. 

Advertisement

தற்போது ஆர்டி-பிசிஆர் மூலமாகவே கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது' என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.