முகப்பு
இந்தியா

கேரளம்: பேட்டி எடுத்த ஊடகவியலாளருக்கு கரோனா: காசர்கோடு மாவட்ட ஆட்சியர் தனிமைப்படுத்தப்பட்டார்

கேரளத்தில் தொலைக்காட்சியில் பணியாற்றி வரும் ஊடகவியலாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சில நாட்களுக்கு முன்பு அவர் பேட்டி எடுத்த காசர்கோடு மாவட்ட ஆட்சியர் தனிமைப்படுத்தப்பட்டார்.

Updated On : 30 ஏப்ரல், 2020 at 11:15 AM
பகிர்:


காசர்கோடு: கேரளத்தில் தொலைக்காட்சியில் பணியாற்றி வரும் ஊடகவியலாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சில நாட்களுக்கு முன்பு அவர் பேட்டி எடுத்த காசர்கோடு மாவட்ட ஆட்சியர் தனிமைப்படுத்தப்பட்டார்.

காசர்கோடு மாவட்ட ஆட்சியர், அவரது கார் ஓட்டுநர் மற்றும் பாதுகாவலர் என மூன்று பேரும் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேரளத்தில் புதன்கிழமையன்று ஒரு ஊடகவியலாளர் மற்றும் மூன்று மருத்துவப் பணியாளர்கள் உட்பட 10 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார்.

Advertisement

கேரளத்தில் முதல் முறையாக ஊடகவியலாளர் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, அந்த ஊடகவியலாளருக்கு ஏப்ரல் 19ம் தேதி தான் பேட்டி கொடுத்ததாக காசர்கோடு மாவட்ட ஆட்சியர் சஜித் பாபு தெரிவித்துள்ளார். இதையடுத்து, நானும், கார் ஓட்டுநர் மற்றும் பாதுகாவலரும் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளோம் என்று கூறினார்.

அவர் பணியாற்றி வந்த ஊடகத்தில் ஊழியர்களும் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.