முகப்பு
இந்தியா

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள  மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல் வெளியிட்டுள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:56 PM
கோப்புப்படம்
பகிர்:

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள  மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல் வெளியிட்டுள்ளார். 

சிபிஎஸ்இ-இன் அதிகாரப்பூர்வ இணையதளமான http://cbseresults.nic.in. என்ற தளத்தில் மாணவர்கள் முடிவுகளைக் காணலாம். 

முன்னதாக, கரோனா பொதுமுடக்கம் காரணமாக நடப்பு கல்வியாண்டின் சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு நடத்தப்படாமல் இருந்த தோ்வுகள் ஜூலை மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர் கல்வியாளர்கள் பரிந்துரைக்கு ஏற்ப தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

மேலும், மாணவர்களுக்கு முந்தைய பருவத் தேர்வுகள், மாணவர்களின் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments